ADDED : ஏப் 20, 2026 02:00 AM
அ நிறம் | அளவு
திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே குஞ்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் 65. இவரது மகன் ரவிச்சந்திரன் 34. தந்தைக்கும் மகனுக்கும் இடையே குடும்ப பிரச்னையால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
ஏப்.16ல் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன், தந்தை ஆறுமுகத்தை கம்பால் தாக்கினார். இதில் காயமடைந்த ஆறுமுகம் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று மாலை இறந்தார். திருவாடானை போலீசார் ரவிச்சந்திரனை தேடுகின்றனர்.
