தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பள்ளி சுவர் இடிவதால் அச்சம்

பள்ளி சுவர் இடிவதால் அச்சம்

பள்ளி சுவர் இடிவதால் அச்சம்


ADDED : ஜூன் 05, 2025 12:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2025 12:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் எஸ்.என்.வி., அரசு மேல்நிலைப்பள்ளி ஜீவா நகரில் செயல்படுகிறது. பள்ளியானது ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள மாதிரி பள்ளியாக செயல்படுகிறது.

இங்கு மாணவர்கள் படிக்கும் சூழலில் பாதுகாப்பு கருதி பள்ளிக்கு ஒட்டுமொத்தமாக சுற்றுச்சுவர் இருக்கிறது. கடந்த ஆண்டுகளில் அருகில் உள்ள விடுதியை ஒட்டியுள்ள சுவர்கள் இடிந்தன.

தற்போது நயினார்கோவில் ரோட்டை ஒட்டிய பகுதியில் ஆங்காங்கே சுவர் இடிகின்றது. தொடர்ந்து இரவு நேரங்களில் சமூகவிரோதிகள் புகலிடமாக மாறுகிறது.

தற்போது பள்ளி துவங்கிய நிலையில் மாணவர்கள் விளையாட்டுப் போக்கில் சுவர் இல்லாத பகுதிகளில் கடந்து செல்கின்றனர்.

மேலும் நாய் மற்றும் கால்நடைகள் மைதானங்களில் புகுவதால் ஆபத்தான சூழல் உள்ளது. இதனால் விபத்து அச்சம் அதிகரித்துள்ளது.

ஆகவே மாதிரி பள்ளியாக உள்ள இங்கு அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும்.

தொடர்ந்து மாணவர்களின் உயிருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள சுற்றுச்சுவரை சீர் செய்ய பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us