/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிராமங்களில் ஆடு திருடும் கும்பல் அதிகரிப்பால் அச்சம்
/
கிராமங்களில் ஆடு திருடும் கும்பல் அதிகரிப்பால் அச்சம்
கிராமங்களில் ஆடு திருடும் கும்பல் அதிகரிப்பால் அச்சம்
கிராமங்களில் ஆடு திருடும் கும்பல் அதிகரிப்பால் அச்சம்
ADDED : டிச 24, 2024 04:20 AM
திருவாடானை: திருவாடானை, தொண்டி பகுதியில் இரவில் ஆடுகளை திருடும் கும்பல் அதிகரிப்பதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
திருவாடானை தாலுகாவில் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. ஆட்டுக் கறி விலை அதிகரித்துள்ளதால் கிராமங்களில் விவசாயிகள் ஆடுகள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இரவில் வீடுகள் முன்பு படுத்திருக்கும் ஆடுகளை சிலர் திருடிச் செல்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு செக்காந்திடல் கிராமத்தில் சரக்கு வாகனத்தில் வந்த சிலர் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடிச் சென்றனர். நேற்று முன் தினம் கிளியூர் கிராமத்தில் மர்ம நபர்கள் ஆடுகளை திருடச் சென்ற போது மக்கள் விரட்டியதால் தப்பிச் சென்றனர். அக்கிராம மக்கள் கூறியதாவது:
நேற்று முன்தினம் இரவு சுடுகாட்டில் டூவீலர்களை நிறுத்தி விட்டு கிராமத்திற்குள் கும்பல் வந்தனர். அவர்களை துரத்திச் சென்ற போது டூவீலரில் தப்பிச் சென்றனர். இரவில் போலீசார் ரோந்து செல்லும் போது சந்தேகப்படும் நபர்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.