/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் பிப்.2 முதல் 12 வரைபுத்தகத் திருவிழா: தினமும் கலைநிகழ்ச்சி

ADDED : ஜன 09, 2024 12:00 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் பிப்.2 முதல் 12 வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. டிஜிட்டல் நுாலகம் அமைக்கப்பட்டு தினமும் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
மாவட்ட நிர்வாகம், கலை இலக்கிய ஆர்வலர்கள் சங்கம் இணைந்து ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பிப்.2 முதல் 12 வரை புத்தகத் திருவிழா நடத்துகின்றனர். இதில் நுாற்றுக்கு மேற்பட்ட எழுத்தாளர்களின் புத்தகங்கள் இடம்பெறுகின்றன.
தினமும் பட்டிமன்றம், கருத்தரங்கம், பயிற்சிப் பட்டறை என பல்சுவை கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம். தள்ளுபடி விலையில் புத்தகம் வாங்கலாம்.
ஏற்பாடுகளை ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.