/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் ஆக.23ல் மாநில மாநாடு ஊரக வளர்ச்சித்துறை சங்கங்களின் கூட்டமைப்பு தகவல்

ADDED : ஆக 06, 2025 08:49 AM
பெருநாழி : தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக., 23ல் திருச்சியில் மாநில மாநாடு நடக்கிறது.
தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பெருநாழி முருகன், மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட பொருளாளர் சிவசாமி கூறியதாவது:
துாய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி ஊராட்சி மூலம் ஊதியத்தை வழங்க வேண்டும். ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றிய பதிவறை எழுத்தருக்கு பொருந்தும் அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும்.
ஊராட்சி செயலர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை, தேக்க நிலை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.,23ல் திருச்சியில் மாநில அளவிலான கோரிக்கை மாநாடு நடக்கிறது.
இந்த மாநாட்டிற்கு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜான் போஸ்கோ பிரகாஷ் தலைமை வகிக்கிறார். தோழமை சங்க நிர்வாகிகள் மகேஸ்வரன், ராமலிங்கம், ரங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி மாநாட்டை துவக்கி வைக்கிறார்.
மாநாட்டில் தோழமை சங்கத்தின் நிர்வாகிகள் வேல்முருகன், முத்துமாரி, மக்கள் நல பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் புதியவன் உட்பட ஏராளமான சங்க நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். மாநாட்டில் பங்கேற்பதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து திரளான ஊராட்சி செயலர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்றார்.