/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரூ. 3 ஆயிரம் லஞ்சம் பெண் தலையாரி கைது
/
ரூ. 3 ஆயிரம் லஞ்சம் பெண் தலையாரி கைது
ADDED : மார் 20, 2025 02:35 AM

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சின்னநாகாச்சி கிராமத்தைச் சேர்ந்த பெண் தலையாரி, முதியோர் உதவித்தொகை பெற்றுத் தந்ததாக லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டார்.
பரமக்குடி அருகே போகலூர் ஒன்றியம் சின்னநாகாச்சி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உதவித்தொகை பெற விண்ணப்பித்துள்ளார். பிப்ரவரி முதல் உதவித்தொகை பெற்று வருகிறார்.
இந்நிலையில் சின்னநாகாச்சி குரூப் தலையாரி அம்பேத்ராணி 42, நான் பரிந்துரை செய்ததால் தான் உதவித்தொகை கிடைத்துள்ளது. ஆகவே 3000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார்.
இதனை கொடுக்க விரும்பாத முதியவர் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். போலீசாரின் அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய ரூ. 3 ஆயிரத்தை அம்பேத்ராணியில் கொடுத்தார். அங்கிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அம்பேத்ராணியை கைது செய்து விசாரிக்கின்றனர்.