/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குறைவான பஸ்கள்: பயணிகள் பாதிப்பு
/
குறைவான பஸ்கள்: பயணிகள் பாதிப்பு
ADDED : ஜன 19, 2026 06:39 AM
திருவாடானை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குறைவான பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.
திருவாடானை, தொண்டி பஸ்ஸ்டாண்டுகளில் இருந்து வழக்கமாக செல்லும் பஸ்களை காட்டிலும் குறைவான பஸ்கள் இயங்கியது.
இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பெண்கள், முதியோர், குழந்தைகளுடன் வந்த பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர். அரசு பஸ்கள் மட்டுமின்றி, பொங்கல் விடுமுறை காரணமாக பல தனியார் பஸ்களும் சேவையை நிறுத்தினர்.
குறிப்பாக திருவாடானையில் இருந்து ஓரியூர், திருவெற்றியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன.
இதனால் ஆட்டோ, வாடகை வாகனங்களை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து அரசு போக்குவரத்துத் துறை அலுவலர்கள் கூறுகையில், பொங்கல் பண்டிகை நாட்களில் பல பகுதிகளில் எதிர்பார்த்த அளவுக்கு பயணிகள் கூட்டம் இல்லை.
காலியான பஸ்களை இயக்குவது நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதால் பயணிகள் கூட்டம் குறைவான வழித்தடங்களில் சில பஸ்கள் தற்காலிகமாக நிறுத்தப் பட்டன.
தேவைக்கேற்ப பஸ்கள் இயக்கப்பட்டன என்றனர்.

