UPDATED : அக் 07, 2026 06:29 PM
ADDED : அக் 07, 2026 06:26 PM
அ நிறம் | அளவு
சாயல்குடி: சாயல்குடி அரசு தொடக்கப்பள்ளியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
தீயணைப்பு நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமை வகித்தார். வடகிழக்கு பருவமழை காலங்களில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் எவ்வாறு விழிப்புடன் செயல்பட வேண்டும் என்பது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்ப பணிகள் துறையின் அவசரகால எண்.112க்கு அழைத்து தகவல் தெரிவிக்க வலியுறுத்தினர். கடலாடி மண்டல துணை தாசில்தார் கீதா, ஆர்.ஐ., மணிவண்ணன், வி.ஏ.ஓ., பழனி, தலைமை யாசிரியர் கீதாரா மணி பங்கேற்றனர்.
