ADDED : மார் 07, 2026 07:38 AM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை அருகே உள்ள பண்ணவயல் அரசு நடுநிலைப்பள்ளியில் தீயணைப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் முருகானந்தம் தலைமை வகித்தார். வீரர்கள் ஆடையில் தீப்பிடித்தால் ஓடாமல் தரையில் உருண்டு அணைப்பது எப்படி, ஆபத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது எப்படி என்பது குறித்து போட்டி நடத்தினர்.
இதில் சரியான பதில் அளித்த மாணவர்களுக்கு தீயணைப்புத் துறை சார்பில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
