ADDED : மார் 03, 2026 05:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வண்டிக்கா பிள்ளையார் கோவில் தெருவில் சிறிய ஹோட்டல் செயல் படுகிறது. நேற்று மதியம் 12:00 மணிக்கு உணவு சமைக்கும் போது தீப் பிடித்தது. கடையில் உள்ள மற்றப் பொருட் களுக்கும் தீ பரவியது.
இதனால் கடை உரிமையாளர்கள் தீயை அணைக்க முடியாமல் தவித்தனர். அந்த இடத்தில் இரு காஸ் சிலிண்டர்கள் இருந்ததால் அங்கிருந்தவர்கள் வெளியேறிவிட்ட னர். சம்பவ இடத்துக்கு வந்த ராமநாதபுரம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

