ADDED : மார் 14, 2024 03:26 AM

அ நிறம் | அளவு
சாயல்குடி; சாயல்குடி அருகே நரிப்பையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு பணிபுரியும் செவிலியர்கள், டாக்டர்கள், மருத்துவ உதவியாளர்களுக்கு தீத் தடுப்பு குறித்த ஒத்திகை பயிற்சி நடந்தது.
தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்யக்கூடிய முதலுதவி பயிற்சியும், தீப்பற்றிக் கொண்டால் அணைப்பது குறித்து செயல்முறை விளக்கத்தை சாயல்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் முத்து தலைமையில் நடத்தினர்.
