ADDED : மார் 07, 2026 07:47 AM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் புத்தேந்தல் ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தீயணைப்புத் துறை உதவி மாவட்ட அலுவலர் ராஜூ தீ பாதுகாப்பு குறித்தும், அவசர காலங்களில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் விளக்கினார்.
மாணவர்களுக்கு தீ பாதுகாப்பு குறித்து தேர்வு நடத்தப்பட்டு அதில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
