UPDATED : ஜூன் 07, 2026 04:32 PM
ADDED : ஜூன் 07, 2026 04:30 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்:ராமநாதபுரம் தீயணைப்புத் துறை அலுவலகத்தில் தனியார் நிறுவன பாதுகாவலர்களுக்கு தீத்தடுப்பு முறைகள் குறித்த பயிற்சி வகுப்பு மாவட்ட அலுவலர் ஏழுமலை தலைமையில் நடந்தது.
உதவி மாவட்ட அலுவலர் சாமிராஜ் பயிற்சி வகுப்பு நடத்தினார். தொடர்ந்து தீயணைப்பு நிலையத்தில் உள்ள தீத்தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செயல்விளக்கம் செய்து காட்டினர். மேலும் தீயின் வகைகள், ஒவ்வொரு தீயையும் எவ்வாறு அணைக்க வேண்டும், எண்ணெய், காஸ் மூலம் பரவும் தீயை கட்டுப்படுத்தும் முறை , வாகன தீ விபத்தின் போது செயல்படும் முறை குறித்த விளக்கினர். தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தும் முறை, தீவிபத்தின் போது தப்பிக்கும் முறை குறித்து காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
---
