தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தனியார் காவலாளிகளுக்கு தீயணைப்பு பயிற்சி கட்டாயம்

 தனியார் காவலாளிகளுக்கு தீயணைப்பு பயிற்சி கட்டாயம்

 தனியார் காவலாளிகளுக்கு தீயணைப்பு பயிற்சி கட்டாயம்


ADDED : பிப் 10, 2026 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2026 05:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் காவலாளிகள் தீயணைப்பு பயிற்சியை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலர் ஏழுமலை தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் காவலாளிகளுக்கு இலவச தீயணைப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

மாவட்ட அலுவலர் ஏழுமலை கூறியதாவது: அவசர காலங்களில் தீயணைப்பு கருவிகளை பயன்படுத்துவது குறித்து பயிற்சி பெற்றவர்கள் இல்லாததால் பெரிய அளவில் விபத்து ஏற்படுகின்றன. இதனை தவிர்ப்பதற்காக காவலாளிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு நிறுவனத்திலும் 3 மாதங்களுக்கு ஒரு முறை தீயணைப்பு பயிற்சி நடத்த வேண்டும் என்றார். காவலாளிகளுக்கு தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு, கையேடுகள் வழங்கப்பட்டன. உதவி மாவட்ட அலுவலர் சாமிராஜ், தீயணைப்பு நிலைய அலுவலர்கள் பங்கேற்றனர்.

திருவாடானை தீயணைப்புநிலையத்தில் நிலைய அலுவலர் முருகானந்தம் தலைமை வகித்தார். பயிற்சி முகாமில் சமையல் சிலிண்டரில் தீப்பிடித்தால் ஈரப்போர்வை கொண்டு அணைப்பது எப்படி, தீ ஷார்ட் சர்க்யூட் ஏற்படும் போது தண்ணீரைப் பயன்படுத்தக் கூடாது, மணல், ரசாயனப் பொடி பயன்படுத்துவது போன்ற விளக்கம் அளிக்கபட்டது.

சாயல்குடி சாயல்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய வளாகத்தில் தீ பாதுகாப்பு பயிற்சி வழங்கப்பட்டது. நிலைய அலுவலர் (பொ) ஆறுமுகம் தலைமை வகித்தார். தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் பயிற்சிகளை நடத்தினர். சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

ஆர்.எஸ்.மங்கலம் தீயணைப்பு, மீட்பு பணிகள் நிலைய வளாகத்தில் நிலைய அலுவலர் கருப்பையா தனியார் காவலர்களுக்கு பயிற்சி அளித்தார். அவசர காலங்களில் செயல்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், உடனடி பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us