நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை தாலுகாவில் தீபாவளியை முன்னிட்டு திருவாடானை, தொண்டி, சின்னக்கீரமங்கலம் ஆகிய ஊர்களில் 10 பேருக்கு பட்டாசு விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறையினர் கூறியதாவது:
உரிமம் பெற்ற பட்டாசு கடைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் பட்டாசு இருப்பு வைத்திருக்க கூடாது. உரிமம் பெற்ற இடத்தில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். அலைபேசிகளை கடைக்கு உள்ளே சார்ஜ் போடக்கூடாது.
உரிமையாளர்கள் மற்றும் அங்கு பணிபுரிபவர்கள் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்திருத்தல் வேண்டும்.
சீன தயாரிப்பு பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது.
அரசு விதிமுறைகளை மீறி செயல்படும் பட்டாசு கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.