/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் போட்டி முதல் பரிசு 5 லட்சம் ரூபாய் அறிவிப்பு
/
விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் போட்டி முதல் பரிசு 5 லட்சம் ரூபாய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் போட்டி முதல் பரிசு 5 லட்சம் ரூபாய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் போட்டி முதல் பரிசு 5 லட்சம் ரூபாய் அறிவிப்பு
ADDED : டிச 21, 2024 02:01 AM
ராமநாதபுரம்:நெல் சாகுபடியை ஊக்கப்படுத்தும் விதமாக மாநிலஅளவிலான பயிர் விளைச்சல் போட்டி நடத்தப்பட்டு முதலிடம் பெறும் விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு வேளாண் துறை சார்பில் திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மாநிலஅளவிலான பயிர் விளைச்சல் போட்டிஅறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாநில அளவில்முதலிடம் பெறும் விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகைமற்றும் ரூ.7000 மதிப்பிலான தங்கப்பதக்கம் வழங்கப்படும். குறைந்தபட்சம் 2 ஏக்கரில் திருந்திய நெல்சாகுபடி முறையில் பயிர் சாகுபடி செய்தவராக இருக்கவேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட நெல் ரகங்களை மட்டுமே பயிர்செய்திருக்க வேண்டும். நில உரிமையாளர்கள், குத்தகைதாரர்களும் இப்போட்டியில் பங்கேற்கலாம்.50 சென்ட் அளவில் பயிர் அறுவடை மேற்கொள்ளப்படும். ஆர்வமுள்ள விவசாயிகள் ரூ.150 பதிவு கட்டணம் செலுத்தவேண்டும். ஒரு முறை பரிசு பெறும் விவசாயி அடுத்த 3ஆண்டுகளுக்கு போட்டியில் கலந்து கொள்ள இயலாது.
அறுவடைசெய்யும் தேதியை 15 நாட்களுக்கு முன்னரே சம்பந்தப்பட்டவட்டார வேளாண் உதவி இயக்குநர்களுக்கு தெரிவிக்கவேண்டும்.இப்போட்டியில்வெற்றியாளர்களை அறிவிப்பதில் சென்னை வேளாண் இயக்குநர் தலைமையிலான மாநில அளவிலான குழுவின்முடிவே இறுதியானது.
மேலும் விபரங்களுக்கு விவசாயிகள்தங்கள் பகுதி வட்டார வேளாண் உதவி இயக்குநர்அலுவலகத்தை அணுகலாம் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.