/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பயிர் காப்பீடு பதிவு செய்ய இன்று முதல் பயிற்சி வகுப்பு
/
பயிர் காப்பீடு பதிவு செய்ய இன்று முதல் பயிற்சி வகுப்பு
பயிர் காப்பீடு பதிவு செய்ய இன்று முதல் பயிற்சி வகுப்பு
பயிர் காப்பீடு பதிவு செய்ய இன்று முதல் பயிற்சி வகுப்பு
ADDED : அக் 24, 2024 04:48 AM
ஆர்.எஸ்.மங்கலம்: பிரதமரின் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் பதிவு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து பொது சேவை மைய (சி.எஸ்.சி) பொறுப்பாளர்களுக்கு இன்று(அக்.24) முதல் பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன.
விவசாயிகள் சாகுபடி செய்யும், நெல், மிளகாய், கோதுமை, உளுந்து, வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் போது விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் விதமாக 2016 முதல் பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நடப்பு காரி பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு நவ.15 வரை இன்சூரன்ஸ் செய்ய அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் பொதுச் சேவை மையத்தில் காப்பீடு செய்ய வசதியாக பொது சேவை மைய பொறுப்பாளர்களுக்கு இன்று(அக்.24) முதல் வேளாண் துறை மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் பயிற்சி வகுப்பு நடக்கிறது.
இன்று காலை 10:30 மணிக்கு திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா பொது சேவை மைய பொறுப்பாளர்களுக்கு ஆர்.எஸ். மங்கலம் வட்டார வேளாண் விரிவாக்கம் மையத்திலும், மதியம் 2:30 மணிக்கு பரமக்குடி, சத்திரக்குடி, நயினார் கோவில் பகுதியினருக்கு பரமக்குடி வட்டார வேளாண் விரிவாக்க மையத்திலும், நாளை (அக்.25) காலை 10:30 மணிக்கு கமுதியிலும், மதியம் 2:30 மணிக்கு முதுகுளத்துாரிலும், அக்.28 காலை 10:30 மணிக்கு ராமநாதபுரம் வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்திலும் பயிற்சி வகுப்புகள் நடப்பதாக சி.எஸ்.சி., மைய மாவட்ட மேலாளர் ஜெயபிரகாஷ் தெரிவித்தார்.