ADDED : ஆக 23, 2025 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தலைமை வகித்தார்.
முதல்வர் பெரியசாமி முன்னிலை வகித்தார். ஆங்கிலத்துறை பேராசிரியர் கவிதா வரவேற்றார். தாளாளர் பேசுகையில், மாணவர்கள் ஆங்கில திறனை வளர்த்துக் கொள்வதன் மூலம் சிறந்த மாணவர்களாக திகழ முடியும் என்றார். முதலாம் ஆண்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெய லட்சுமி நன்றி கூறினார்.