/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீன் கண்காட்சியகம் 79-வது ஆண்டு விழா
/
மீன் கண்காட்சியகம் 79-வது ஆண்டு விழா
ADDED : பிப் 04, 2026 05:32 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபம் மத்திய மீன் ஆராய்ச்சி நிலையத்தில் 79வது ஆண்டு விழாவையொட்டி மீன் கண்காட்சியகத்தை ஏராளமான மாணவர்கள் கண்டு ரசித்தனர்.
நேற்று மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தின் 79வது ஆண்டு விழாவையொட்டி 'திறந்த வெளி இல்ல நிகழ்வு' நடந்தது. மண்டபம் கேந்திர வித்யாலயா பொறுப்பு முதல்வர் முருகன், மண்டபம் மரைக்காயர்பட்டிணம் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாஷ், மண்டபம் மீன் ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி டாக்டர் வினோத் முன்னிலையில் துவங்கியது. இதனைத் தொடர்ந்து ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள மீன் குஞ்சுகள் பொரிப்பகம், மீன் அருங்காட்சியகத்தை ராமநாதபுரம், சிவகங்கையை சேர்ந்த ஏராளமான மாணவிகள் கண்டு ரசித்து பயனடைந்தனர். மேலும் கடல் சூழல் அமைப்பு, கடல் வளங்கள் மற்றும் அவற்றின் பாதுகாப்பு நிலையான பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவர்கள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.

