/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நீர் நிலைகளில் விடப்பட்ட மீன் குஞ்சுகள்
/
நீர் நிலைகளில் விடப்பட்ட மீன் குஞ்சுகள்
ADDED : ஜன 05, 2025 11:50 PM
ஆர்.எஸ்.மங்கலம்; மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பெய்த மழையால் பெரும்பாலான கண்மாய்கள், குளங்கள் மற்றும் சிறிய ஊருணிகளிலும் அதிகளவில் தண்ணீர் தேங்கி உள்ளது.
இந்நிலையில் கண்மாயில் தேங்கியுள்ள தண்ணீரில் மீன் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் விவசாய சங்கத்தினர் சார்பில் பிரதான் தொண்டு நிறுவன உதவியுடன் ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட 25 நீர் நிலைகளில் நாட்டு ரக மீன் குஞ்சுகளான கட்லா, ரோகு, மிஸ்கால், புல்லு கெண்டை வகைகளில் 1.58 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பிரதான் தொண்டு நிறுவன திட்ட அலுவலர்கள் மாயகிருஷ்ணன், கார்த்திக், கபில் மற்றும் கண்மாய் நீர்ப் பாசன விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

