/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீனவர்களுக்கு தடையால் மீன்கள் விலை உயர்வு
/
மீனவர்களுக்கு தடையால் மீன்கள் விலை உயர்வு
ADDED : டிச 20, 2024 01:56 AM

ராமேஸ்வரம்:வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் டிச.16ல் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர்.
சூறாவளி எச்சரிக்கை தொடர்வதால் 4ம் நாளான நேற்று மீனவர்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டு வீடுகளில் முடங்கினர். இதனால் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பனில் உள்ள மீன் மார்க்கெட்டில் மீன்கள் வரத்து குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டது.இந்நிலையில் தனுஷ்கோடி கடலில் பாரம்பரியமான கரை வலையில் மீன்பிடிப்பில் மீனவர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் இதில் சிக்கும் மீன்களுக்கு மார்க்கெட்டில் மவுசு அதிகரித்தது.
நேற்று கிலோ மாஊழா மீன் ரூ.450 (ஒருவாரத்திற்கு முந்தைய விலை ரூ.400), சூடை மீன் ரூ.100 (ரூ. 70), பாரை மீன் ரூ.350 (ரூ. 250),நகரை ரூ. 350 (ரூ.300) என விற்றனர். திடீர் விலை உயர்வால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.