/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் கடலில் விழுந்து மீனவர் பலி
/
பாம்பன் கடலில் விழுந்து மீனவர் பலி
ADDED : டிச 27, 2024 02:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் பழைய ரயில் பாலத்தில் துாண்டிலில் மீன்பிடித்த மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
மண்டபம் தோணித்துறையை சேர்ந்தவர் பால்ராஜ் 34. இவர் நேற்று முன்தினம் பாம்பன் பழைய ரயில் பாலத்தின் துாணில் அமர்ந்து துாண்டிலில் மீன் பிடித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கடலில் விழுந்து மூழ்கினார். மீனவர்கள் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று மாலை மண்டபம் அருகே வேதாளை கடற்கரையில் பால்ராஜ் உடல் ஒதுங்கியது. மரைன் போலீசார் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்

