/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குழாய் வெடித்து நடுக்கடலில் மீனவர் காயம்
/
குழாய் வெடித்து நடுக்கடலில் மீனவர் காயம்
ADDED : பிப் 12, 2024 11:34 PM
ராமேஸ்வரம்: நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களின் ஒரு படகில் இஞ்சின் ரேடியேட்டர் குழாய் வெடித்ததில் மீனவர் காயமடைந்தார்.
பிப்.12ல் ராமேஸ்வரத்தில் இருந்து 480 விசைப்படகில் சென்ற மீனவர்கள் இந்திய, இலங்கை எல்லையில் மீன்பிடித்தனர். தங்கச்சிமடத்தை சேர்ந்த சந்தியா என்பவரது விசைப்படகில் வினோத்சன் 36, உள்ளிட்ட 6 மீனவர்கள் மீன்பிடித்தனர். அப்போது படகு இஞ்சினில் உள்ள ரேடியேட்டரில் பழுது ஏற்பட்டதும், அதனை மீனவர் வினோத்சன் சரிசெய்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென ரேடியேட்டர் குழாய் வெடித்தத்தில், சூடான நீர் தெறித்து வினோத்சன் கால்களில் காயம் ஏற்பட்டது. இதனால் அனைவரும் கரைக்கு திரும்பினர். நேற்று மாலை ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.