/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மின்சாரம் தாக்கி மீனவர் பெயின்டர் பலி
/
மின்சாரம் தாக்கி மீனவர் பெயின்டர் பலி
ADDED : அக் 16, 2025 02:29 AM

தேவிபட்டினம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று தனித்தனி சம்பவங்களில் மின்சாரம் தாக்கி மீனவர், பெயின்டர் என இருவர் பலியானார்கள்.
தேவிபட்டினம் ஆர்.சி.தெருவை சேர்ந்த சவேரியார் மகன் சவேரி கிளின்டன் 27. மீனவரான இவர் நேற்று காலை வீட்டின் கூரையில் மீன்பிடி வலைகளை உலர்த்தி உள்ளார். மழை பெய்த நிலையில் வலைகளை அப்புறப்படுத்திய போது அந்த பகுதி வழியாகச் சென்ற மின்கம்பியிலிருந்து மின்சாரம் தாக்கியது.
இதில் பலத்த காயமடைந்த கிளின்டனை தேவிபட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார்.
சாயல்குடி அருகே டி.சேதுராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெயின்டர் முனியசாமி 47. இவர் மாரியூரில் ஒரு கட்டடத்தில் நேற்று மதியம் 12:00 மணிக்கு ஸ்டிக்குடன் கூடிய ரோலர் மூலம் பெயின்ட் அடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது வீட்டின் முன்புறம் சென்ற உயரழுத்த மின்கம்பியில் அலுமினிய குச்சி உரசியது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் பலியானார்.
இவருக்கு மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். சாயல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.