/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மிதவை வலையில் சிக்கிய அரிய வகை ஆமை கடலுக்குள் விட்ட மீனவர்
/
மிதவை வலையில் சிக்கிய அரிய வகை ஆமை கடலுக்குள் விட்ட மீனவர்
மிதவை வலையில் சிக்கிய அரிய வகை ஆமை கடலுக்குள் விட்ட மீனவர்
மிதவை வலையில் சிக்கிய அரிய வகை ஆமை கடலுக்குள் விட்ட மீனவர்
ADDED : ஏப் 09, 2025 03:09 AM

சாயல்குடி:ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி உப்பு தண்ணீர் தீவு அருகே நேற்று முன்தினம் விரிக்கப்பட்ட வலையில் 100 கிலோ 'ஆலிவர் ட்ரீ' பெண் ஆமை சிக்கியது. பைபர் நாட்டுப்படகில் சென்ற ஒப்பிலான் ஒத்தப்பனையைச் சேர்ந்த மீனவர் சுகன் ரவி 35, இதை பார்த்தார். ஆமையின் துடுப்பு பகுதியில் சுற்றிக்கொண்ட வலையை லாபகமாக பிரித்து எடுத்து ஆமையை மீண்டும் கடலுக்குள் விட்டார்.
இச்செயலை தனது அலைபேசி மூலம் வீடியோ மற்றும் போட்டோவாக எடுத்து சாயல்குடி வனச்சரக அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். மீனவரின் இந்தச் செயலை சாயல்குடி வனச்சரக அலுவலகத்தினர் பாராட்டி ஊக்கப்படுத்தினர்.
வனச்சரக அலுவலர்கள் கூறியதாவது: வலையில் சிக்கும் அரிய வகை கடல் ஆமை, கடல் பசு, டால்பின் உள்ளிட்டவைகளை பத்திரமாக மீண்டும் கடலுக்குள் சேர்ப்பது மீனவர்களின் கடமை. ஆமையை மீட்ட மீனவரின் செயல் பாராட்டிற்குரியது என்றனர்.
--