ADDED : செப் 08, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
கீழக்கரை: கீழக்கரை அருகே ஸ்ரீ நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் 46. இவர் மீன்பிடித் தொழில் செய்து வந்துள்ளார். சில நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு லட்சுமிபுரம் செல்லும் வழியில் உள்ள தென்னந்தோப்பில் மதுவுடன் சேர்த்து பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து குடித்துள்ளார்.
கீழக்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் இறந்தார். மனைவி கோகிலா புகாரில் கீழக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
