/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆழ்கடல் படகிற்கு வங்கி கடன் ரத்து இயக்குநரிடம் மீனவர்கள் முறையீடு
/
ஆழ்கடல் படகிற்கு வங்கி கடன் ரத்து இயக்குநரிடம் மீனவர்கள் முறையீடு
ஆழ்கடல் படகிற்கு வங்கி கடன் ரத்து இயக்குநரிடம் மீனவர்கள் முறையீடு
ஆழ்கடல் படகிற்கு வங்கி கடன் ரத்து இயக்குநரிடம் மீனவர்கள் முறையீடு
ADDED : டிச 14, 2024 02:54 AM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கு வங்கி கடனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மீனவர் நலத்துறை இயக்குநரிடம் மீனவர்கள் முறையிட்டனர்.
நேற்று ராமேஸ்வரம் வந்த மீனவர் நலத்துறை இயக்குநர் கஜலட்சுமி ராமேஸ்வரத்தில் கட்டிய புதிய மீன் இறக்கும் பாலத்தை பார்வையிட்டார். பின் படகுகளில் உள்ள இன்ஜின் குதிரை திறன், படகுகள் தரம் குறித்து மீனவர்களிடம் விசாரித்தார்.
பின்னர் மீன்துறை அலுவலகத்தில் இயக்குனர் கஜலட்சுமி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மீனவர் சங்க தலைவர்கள் போஸ், சேசு, சகாயம், எமரிட் உட்பட பலர் பங்கேற்றனர்.
இலங்கை கடற்படை தாக்குதலால் வாழ்வாதாரம் இழந்த நிலையில் மாற்று தொழிலுக்கு நிதியின்றி தவிக்கிறோம். ஏற்கனவே ஆழ்கடல் படகிற்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் உள்ளதால் வங்கி கடனை ரத்து செய்ய நடவடிக்கை எடுங்கள். ராமேஸ்வரம் அருகே மீன் அரவை ஆலை அமைத்தால் இங்குள்ள மீன்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும். அரசு டீசல் பங்குகளில் விலை வித்தியாசத்தை தடுக்க வேண்டும் என மீனவர்கள் முறையிட்டனர்.
இயக்குநர் பதிலளிக்கையில், இலங்கை கெடுபிடியில் இருந்து பாதுகாக்க மீனவர்கள் கூண்டு வலையில் மீன்பிடிப்பு, கடல்பாசி, அழகு மீன்கள் வளர்ப்பில் ஆர்வம் காட்ட வேண்டும்.
இதற்காக மானியத்துடன் நிதி வழங்கப்படுகிறது. மீனவர்கள் பிரச்னை குறித்து அரசுக்கு பரிந்துரைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

