/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வங்க கடலில் புயல் எச்சரிக்கையால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
/
வங்க கடலில் புயல் எச்சரிக்கையால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
வங்க கடலில் புயல் எச்சரிக்கையால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
வங்க கடலில் புயல் எச்சரிக்கையால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
ADDED : நவ 25, 2024 07:03 AM
தொண்டி : வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் நேற்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என மீன்வளத்துறை எச்சரித்துஉள்ளது.
இதுகுறித்து தொண்டியில் மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. ராமேஸ்வரம், பாம்பன், தொண்டி உள்ளிட்ட கடலில் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து மீன்பிடி படகுகளும் கரைக்கு திரும்பவேண்டும். மீனவர்கள் தங்களது படகுகளை கடற்கரை ஓரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி கொள்ள வேண்டும்.
இந்த அறிவிப்பினை மீறி கடலுக்கு செல்லும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.