ADDED : மார் 20, 2026 03:06 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் மீனவர்களுக்கான மானிய டீசல் வழங்கும் பங்கை மாற்றியதை கண்டித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மண்டபம் தெற்கு கடற்கரையில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர். இவர்கள் மண்டபத்தில் உள்ள மீன் வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான டீசல் பங்க் மூலம் 18 ஆண்டுகளாக அரசு வழங்கும் மானிய விலை டீசலை பெறுகின்றனர்.
இந்நிலையில் 3 நாட்களுக்கு முன் இந்த பங்கில் 1 லிட்டர் டீசல் ரூ. 2 விலை உயர்ந்தது. இதனால் பாம்பனில் உள்ள பங்கில் டீசல் பிடியுங்கள் என மண்டபம் டீசல் பங்க் அதிகாரி கூறியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டபம் டீசல் பங்க் முன்பு மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குனர் சின்னகுப்பன், அதிகாரிகள் சமரசம் செய்த பின் மீண்டும் மண்டபம் பங்கில் டீசல் பெற்றனர்.
மண்டபம் பாரம்பரிய விசைப்படகு மீனவர்கள் சங்கத் தலைவர் ஆசாத் கூறியதாவது: பல ஆண்டுகளாக மண்டபத்தில் மானிய டீசல் பெற்ற நிலையில், திடீரென பாம்பனுக்கு மாற்றியது கண்டனத்திற்குரியது. தேர்தல் நடத்தை விதியால் பணம் கொண்டு செல்ல முடியாது. இப்பிரச்னைக்கு உயர் அதிகாரி உத்தரவால் தீர்வு ஏற்பட்டது என்றார்.
