/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் புதிய ரயில் பாலத்தை தடை மீறி கடக்கும் மீனவர்கள்
/
பாம்பன் புதிய ரயில் பாலத்தை தடை மீறி கடக்கும் மீனவர்கள்
பாம்பன் புதிய ரயில் பாலத்தை தடை மீறி கடக்கும் மீனவர்கள்
பாம்பன் புதிய ரயில் பாலத்தை தடை மீறி கடக்கும் மீனவர்கள்
ADDED : செப் 26, 2024 04:48 AM

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பனில் புதிய ரயில் பாலம் கட்டும் பணி நடக்கும் நிலையில் மீனவர்கள் தடையை மீறி படகில் கடந்து செல்வதால் விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
பாம்பன் புதிய ரயில் பாலம் கட்டும் பணி 2020ல் துவங்கியது. தற்போது பாலம் பணிகள் முடிந்த நிலையில் நடுவில் துாக்கு பாலத்தை பொருத்தும் இறுதிக்கட்ட பணிகள் நடக்கிறது. இந்த நேரத்தில் பாலத்தை கடக்கும் மீனவர்கள் மீது கனரக இரும்பு பொருட்கள் தவறி விழுந்தால் ஆபத்து ஏற்படும் என்பதால்  ஏப்., முதல் மீனவர்கள் பாலத்தை கடந்து செல்ல ரயில்வே நிர்வாகம் தடை விதித்து எச்சரிக்கை பலகை வைத்துள்ளது.
ஆனால் அதை பொருட்படுத்தாமல் மண்டபம், பாம்பன் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் சீசனுக்கு மன்னார் வளைகுடா கடல், பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க பாம்பன் ரயில் பாலத்தை கடந்து செல்கின்றனர். இது ரயில்வே பொறியாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
தடையை மீறி பாலத்தை கடந்து செல்லும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரயில்வே நிர்வாகம் தமிழக அரசை வலியுறுத்த வேண்டும்.

