/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கை நீதிமன்ற தண்டனையை ரத்து செய்ய வேண்டும் மீனவர்கள் தீர்மானம்
/
இலங்கை நீதிமன்ற தண்டனையை ரத்து செய்ய வேண்டும் மீனவர்கள் தீர்மானம்
இலங்கை நீதிமன்ற தண்டனையை ரத்து செய்ய வேண்டும் மீனவர்கள் தீர்மானம்
இலங்கை நீதிமன்ற தண்டனையை ரத்து செய்ய வேண்டும் மீனவர்கள் தீர்மானம்
ADDED : நவ 23, 2024 02:28 AM
ராமேஸ்வரம்,:இலங்கை சிறையில் வாடும் மீனவர்களுக்கு நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.
ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் உலக மீனவர் தின விழா நடந்தது. முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திர ராமவன்னி, மீனவர் சங்கத் தலைவர்கள் சேசு, சகாயம், எமரிட், ராயப்பன், மீனவ மகளிர் சங்கத் தலைவி இருதயமேரி உட்பட பலர் பங்கேற்றனர்.
இலங்கை கடற்படை வசமுள்ள படகுகளை மத்திய அரசு மீட்டுத்தர வேண்டும். இலங்கை சிறையில் வாடும் மீனவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச தண்டனையை ரத்து செய்ய வேண்டும். உயிரிழந்த மீனவர்களுக்கு நலவாரிய நிதியை உடனே வழங்க வேண்டும்.
கடலில் மீன் பிடிக்கும் போது மாரடைப்பில் உயிரிழக்கும் மீனவர்களுக்கும் நிதி வழங்க வேண்டும். தமிழக மீனவர்களின் படகை இலங்கை கடற்படையினர் பயன்படுத்துவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.