/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீன் வரத்து குறைவு மீனவர்கள் ஏமாற்றம்
/
மீன் வரத்து குறைவு மீனவர்கள் ஏமாற்றம்
ADDED : ஆக 25, 2025 01:31 AM

ராமேஸ்வரம்: 12 நாட்களுக்குப் பின்மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களுக்கு எதிர்பார்த்த மீன்வரத்து கிடைக்காமல் வருவாய் இழப்பை சந்தித்துள்ளனர்.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகையும் விடுவிக்க மத்திய , தமிழக அரசுகள் நடவடிக்கை எடுக்கக்கோரி ஆக.,11 முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். மீனவர்கள், மத்திய வெளியுறவு அமைச்சரை சந்தித்து முறையிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என அதிகாரிகள் உறுதி அளித்ததும்,ஸ்டிரைக்கை வாபஸ் பெற்று நேற்று முன்தினம் மீன்பிடிக்க சென்றனர்.
ராமேஸ்வரத்தில் 600 விசைப்படகுகள் உள்ள நிலையில், இலங்கை கடற்படை கெடுபிடியால் 336 படகில் மட்டும் மீனவர்கள் மீன்பிடிக்க சென்று நேற்று காலை ராமேஸ்வரம் திரும்பினர்.
12 நாட்களுக்கு பின் சென்றதால் அதிக மீன்கள் சிக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு குறைவான மீன்கள் மட்டுமே சிக்கியது. இருப்பினும் வருவாய் கிடைக்கா விட்டாலும் நஷ்டம் ஏற்படவில்லை என தெரிவித்தனர்.