/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பனில் நாட்டுப்படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
/
பாம்பனில் நாட்டுப்படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 30, 2025 11:28 PM

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அருகே பாம்பனில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி நாட்டுப்படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஜூலை 27ல் பாம்பனில் இருந்து நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்ற 9 மீனவர்களை இலங்கை கடற் படையினர் கைதுசெய்து புத்தளம் சிறையில் அடைத்தனர். இம்மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று பாம்பன் பஸ் ஸ்டாப் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் ராயப்பன் தலைமை வகித்தார். பாம்பன் ஊராட்சி முன்னாள் தலைவர் பேட்ரிக், மீனவர் சங்க தலைவர்கள் சேசு, சகாயம், எமரிட் மற்றும் கைதான மீனவர்களின் குடும்பத்தினர், மீனவர்கள் பலர் பங்கேற்றனர்.