/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீனவர்களுக்கு சேமிப்பு நிவாரணம் கோரி ராமேஸ்வரத்தில் காத்திருப்பு போராட்டம்

ADDED : நவ 07, 2025 03:42 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தேசிய மீனவர் சேமிப்பு நிவாரணம் வழங்கக் கோரி நேற்று மீன்துறை அலுவலக முன்பு ஏ.ஐ.டி.யு.சி.,சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் உள்ள மீனவர்கள் 6957 பேருக்கு தேசிய மீனவர் சேமிப்பு நிவாரணம் மற்றும் மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகை வழங்காமல் மீன்துறையினர் நீக்கினர். இதனை கண்டித்தும், நீக்கிய மீனவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கக் கோரி நேற்று ராமேஸ்வரம் மீன்துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி., மீனவத் தொழிலாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்துறை அதிகாரிகள் உறுதியளித்த பின் தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். இதில் ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகிகள் செந்தில், பாண்டி, தினேஷ்குமார், வடகொரியா, இந்திய கம்யூ., ராமேஸ்வரம் நகர் செயலாளர் செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்.