/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இந்திய- இலங்கை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் இலங்கையில் மீனவர்கள் முடிவு

ADDED : மார் 27, 2025 03:05 AM
ராமேஸ்வரம்:இரண்டாம் கட்டமாக இந்திய- இலங்கை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என இலங்கையில் இருநாட்டு மீனவர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ராமேஸ்வரம் முதல் நாகை வரை உள்ள மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து படகுகளை சிறை பிடிப்பதால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பிரச்னைக்கு தீர்வு காண ராமேஸ்வரம் மீனவர்கள் சேசு, சகாயம், ஜஸ்டின், ஆல்வின், ஜெர்மன்ஸ் மார்ச் 25ல் சென்னையில் இருந்து விமானம் மூலம் இலங்கை சென்றனர்.
நேற்று மன்னார் மாவட்டம் வவுனியாவில் மீனவர்கள் சங்க நிர்வாகிகள் வர்ணகுல சிங்கம், அன்னராசா, ஜோசப் பிரான்சிஸ், ஆலன் ஆகியோரை சந்தித்து பேசினர். இதில், தமிழக மீனவர்களால் எங்களது மீன்வளம், வலைகள் பறிபோனதால் வாழ்வாதாரம் இழந்துள்ளோம்.
எனவே இழுவலையில் மீன்பிடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என இலங்கை மீனவர்கள் கூறினர். இதற்கு கால அவகாசம் கொடுங்கள். எங்களது மீனவர்களும் பல மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாகி உள்ளனர். இதனால் நாங்களும் வாழ்வாதாரம் இழந்துள்ளோம் என ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.இந்நிலையில் 2ம் கட்டமாக இந்திய- இலங்கை உயர் அதிகாரிகள் முன்னிலையில் இருநாட்டு மீனவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என முடிவு செய்தனர்.