ADDED : ஜூன் 16, 2026 02:07 AM
அ நிறம் | அளவு
ராமேஸ்வரம்: பிப்.23ல் பாம்பனில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்களில் ஒரு விசைப்படகில் இருந்த 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. நீர்க்கொழும்பு அருகே வெளிச்சூரா சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். வாய்தா நாளான நேற்று மீனவர்களை வெளிச்சூரா நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்கள் மீண்டும் 2வது முறையாக எல்லை தாண்டி மீன்பிடித்து கைதானால் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவித்து உத்தரவிட்டார். இவர்கள் ஓரிரு தினங்களில் வர உள்ளனர்.
