தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஈரானிலிருந்து திரும்பிய தொண்டி மீனவர்கள்

ஈரானிலிருந்து திரும்பிய தொண்டி மீனவர்கள்

ஈரானிலிருந்து திரும்பிய தொண்டி மீனவர்கள்


ADDED : ஏப் 05, 2026 08:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2026 08:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவாடானை: ஈரானில் சிக்கித் தவித்த ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மீனவர்கள் 13 பேர் பத்திரமாக தாயகம் திரும்பினர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி ,மோர்பண்ணை, நம்புதாளை பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் ஈரானின் கிஷ் தீவு, பந்தர் அப்பாஸ் பகுதிகளில் ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டனர். ஈரானில் போர் துவங்கியவது முதல் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழலில் வாழ்ந்தனர். உணவுக்கும் வழியின்றி தவித்தனர். இதையடுத்து தமிழக மீனவர் நலத்துறை அதிகாரிகள் தலையிட்டு மீட்பு முயற்சியில் ஈடுபட்டனர்.

இதில் திருப்பாலைக்குடியை சேர்ந்த சமயஈஸ்வரன், ராகுல்டிராவிட், விஜயபாண்டி, தர்மராஜ், செல்லக்குழந்தை, முத்தையா, சமயஜீவா, காசிராமன், சகாதேவன், மகாகிருஷ்ணன், முகேஷ் மற்றும் மோர்பண்ணையை சேர்ந்த கபிலன், நம்புதாளையை சேர்ந்த குப்பாண்டி ஆகியோர் நேற்று காலை தாயகம் திரும்பினர். ஈரானில் உள்ள இந்திய துாதரகம் மூலம் இவர்களை மீட்கும் பணிகள் நடந்தன. ஈரானிலிருந்து ஆர்மீனியா நாட்டிற்கு அழைத்து செல்லபட்ட மீனவர்கள், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். மீனவர்களை பார்த்து அவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர். வெடிகுண்டு சத்தம் கேட்டு ஒவ்வொரு நொடியும் அச்சத்தில் இருந்தோம் என மீனவர்கள் கூறினர்.

இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 175 மீனவர்களும், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 80 மீனவர்களும் விமானம் மூலம் சென்னை திரும்பினர். அவர்களை மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us