/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி
/
கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி
ADDED : மே 11, 2025 02:36 AM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடலில் ஆபத்தான ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குவதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மன்னார் வளைகுடா, அரபிக்கடலில் ஏராளமான விஷ ஜெல்லி மீன்கள் உள்ளன. இவை சிறியரக மீன்களை உட்கொள்ளும். தற்போது கோடை வெயிலுக்கு தனுஷ்கோடி, இலங்கை தலைமன்னார் இடையே உள்ள மணல் தீடையை சுற்றியுள்ள பகுதியில் அவற்றை உண்ண வருகின்றன.
அதன்படி மே மாத சீசனில் ஆயிரக்கணக்கான ஜெல்லி மீன்கள் தனுஷ்கோடி கடலில் உலா வருகிறது. இதனால் தனுஷ்கோடி கடல் பகுதியில் கரைவலை மற்றும் நாட்டுப்படகில் மீன்பிடிக்கும் மீனவர்கள் வலையில் ஏராளமான ஜெல்லி மீன்கள் சிக்கி உயிரிழந்து, கடல் அலை வேகத்தில் கரையில் ஒதுங்கியது.
இதனால் தனுஷ்கோடி கடலோரத்தில் உள்ள சிறிய ரக மீன்கள் இடம் பெயர்ந்து செல்வதால் வலையில் மீன்வரத்து இன்றி மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ராமேஸ்வரம் சேராங்கோட்டை மீனவர் உமையராஜ் கூறுகையில் '' வெயில் சீசனில் ஏராளமான ஜெல்லி மீன்கள் உயிரிழந்து கரை ஒதுங்குகிறது. இதனால் உடலில் அரிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் மீன்வரத்தின்றி வருவாய் இழந்து பாதிக்கப்படுகிறோம் ''என்றார்.