/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஐ.ஏ.எஸ்., போட்டித் தேர்வு பயிற்சி பெற மீனவ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
/
ஐ.ஏ.எஸ்., போட்டித் தேர்வு பயிற்சி பெற மீனவ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
ஐ.ஏ.எஸ்., போட்டித் தேர்வு பயிற்சி பெற மீனவ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
ஐ.ஏ.எஸ்., போட்டித் தேர்வு பயிற்சி பெற மீனவ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
ADDED : நவ 06, 2024 05:45 AM
ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்ட மீனவ பட்டதாரி இளைஞர்கள் அரசு நிதி உதவியுடன் ஐ.ஏ.எஸ்., போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெற நவ.,8க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு (ஐ.ஏ.எஸ்.,) பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு குடிமைப்பணிகளுக்கான போட்டித்தேர்வில் கலந்துகொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளிக்கப்படுகிறது. கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேரலாம்.
விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தை www.fisheries.tn.gov.in என்ற இணைதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்யலாம். அல்லது விண்ணப்ப படிவங்களை மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை, துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் அலுவலகங்களில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பங்களை மீன்வளம், மீனவர் நலத்துறை அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் அல்லது நேரடியாக நவ.8 மாலை 5:00 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு மீன்வளம், மீனவர் நலத்துறை அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.