/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆனந்துார் பெரிய ஊருணியில் மீன்கள் செத்து மிதக்கின்றன
/
ஆனந்துார் பெரிய ஊருணியில் மீன்கள் செத்து மிதக்கின்றன
ஆனந்துார் பெரிய ஊருணியில் மீன்கள் செத்து மிதக்கின்றன
ஆனந்துார் பெரிய ஊருணியில் மீன்கள் செத்து மிதக்கின்றன
ADDED : அக் 17, 2024 05:18 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்துார் பெரிய ஊருணியில் மீன்கள் செத்து மிதப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்துார் சிவன் கோயில் அருகில் பெரிய ஊருணி அமைந்துள்ளது. இந்த ஊருணியில் தேங்கியுள்ள தண்ணீரை அப்பகுதி மக்கள் குளிப்பதற்கும், கால்நடைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஊருணி கடந்த சில ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாமல் புதர் மண்டியும், கழிவு நீர் கலந்ததாலும் சுகாதாரமற்ற நிலையில் இருந்தது. இந்நிலையில் தற்போது ஊருணியில் இருந்த மீன்களும் சுகாதார சீர்கேட்டால் செத்து மிதப்பதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் குடியிருப்பு வாசிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஊருணி நீரில் செத்து மிதக்கும் மீன்களை அகற்றி ஊருணியில் சுகாதாரம் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.