ADDED : டிச 21, 2024 02:06 AM
அ நிறம் | அளவு
ராமேஸ்வரம்:சூறாவளி தடை நீங்கியதால் ஐந்து நாட்களுக்கு பின் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறையினர் அனுமதித்தனர்.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழக கடலோரப் பகுதியில் சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் டிச.18 முதல் ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர். டிச.16ல் மீன்துறை அதிகாரிகளை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
நேற்று சூறாவளியின் வேகம் தணிந்ததால் இன்று (டிச., 21) ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறையினர் அனுமதி டோக்கன் வழங்க உள்ளனர். ஐந்து நாட்களுக்கு பின் மீன்பிடிக்க செல்வதால் அதிக மீன்கள் சிக்கும் என ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.
