ADDED : நவ 23, 2025 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி கடலில் பலத்த காற்று வீசியதால் மீனவர்கள் 4 நாட்களுக்கும் மேலாக கடலுக்கு செல்லமால் இருந்தனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் கடலுக்கு செல்ல டோக்கன் வழங்கப்பட்டது. மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
இந்நிலையில் கடலில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தொண்டி மீன்வளத்துறையினர் கூறுகையில், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
எனவே கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனே கரைக்கு திரும்ப வேண்டும்.
மறு உத்தரவு வரும் வரை யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றனர்.

