/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
1.19 லட்சம் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம்
/
1.19 லட்சம் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம்
1.19 லட்சம் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம்
1.19 லட்சம் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம்
ADDED : மே 23, 2025 02:39 AM
ராமநாதபுரம்:தமிழக கடலோர மாவட்டங்களில் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்., 15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கடலுார், திருவாரூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சென்னை ஆகிய 14 மாவட்டங்களில் உள்ள 15,000 விசைப்படகுகள் மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த காலத்தில், மீனவர்களுக்கு நிவாரணத் தொகையாக தலா, 8,000 ரூபாய் வழங்கப்படும்.
ஏப்.,15ல் துவங்கி ஒரு மாதமாகியும், நிவாரணம் வழங்கப்படாததால், மீனவ குடும்பத்தினர் மிகவும் சிரமப்பட்டனர்.
இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியான நிலையில், அதன் எதிரொலியாக தமிழகம் முழுக்க மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை வழங்க அரசு, 140.07 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
நேற்று முன்தினம் முதல் தலா, 1,500 ரூபாய் வீதம் இருமுறையும், ஒருமுறை, 5,000 ரூபாய் என, நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.