/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மே 30 முதல் ஜூன் 6 வரை மீன்பிடி படகுகள் ஆய்வு
/
மே 30 முதல் ஜூன் 6 வரை மீன்பிடி படகுகள் ஆய்வு
ADDED : மே 16, 2025 03:06 AM
ராமநாதபுரம்: மாவட்ட மீன்வளத்துறையில் பதிவு செய்துள்ள, செய்யாத நாட்டுப் படகுகள், விசைப்படகுகளை ஒவ்வொரு பகுதியாக மே 30 முதல் ஜூன் 6 வரை ஆய்வு செய்யப்பட உள்ளன.
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்கு படுத்தும் சட்டம் 1983-ன் படி மாவட்டத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளை ஆய்வு செய்ய குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவானது மே 30, ஜூன் 3ல் ராமநாதபுரம் வடக்கு, ஜூன் 4 ல் ராமநாதபுரம் தெற்கு, ஜூன் 6ல் மண்டபம், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் உள்ள 1650 விசைப்படகுகள் மற்றும் 6271 நாட்டுப்படகுகளை ஆய்வு செய்ய உள்ளது.
கடலில் படகின் நிலைப்புத்தன்மை, படகின் நீளம் அகலம், இயந்திரத்தின் குதிரைத்திறன், உயிர்காப்பு சாதனங்கள், கருவிகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படும்.
ஆய்வில் காண்பிக்கப்படாத, தகுதி இல்லாத விசைப்படகுகள், நாட்டுப்படகுகளின் பதிவு, மானிய விலையிலான டீசல் நிறுத்தம் செய்யப்படும், என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.