/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
துாண்டில் மீன்பிடி அதிகரிப்பு கிலோ ரூ.800 க்கு விற்பனை
/
துாண்டில் மீன்பிடி அதிகரிப்பு கிலோ ரூ.800 க்கு விற்பனை
துாண்டில் மீன்பிடி அதிகரிப்பு கிலோ ரூ.800 க்கு விற்பனை
துாண்டில் மீன்பிடி அதிகரிப்பு கிலோ ரூ.800 க்கு விற்பனை
ADDED : டிச 26, 2024 04:47 AM

திருவாடானை: திருவாடானையை சுற்றியுள்ள ஆறுகளில் துாண்டில் போட்டு மீன் பிடிப்பது அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கிலோ ரூ.800க்கு விற்கின்றனர்.
சில நாட்களாக பெய்த மழையால் திருவாடானை தாலுகா அஞ்சுகோட்டை கண்மாயிலிருந்து கலுங்கு வழியாக மணிமுத்தாறில் செல்லும் நீரால் ஆதியூர், அரும்பூர், திருவெற்றியூர், குளத்துார் உள்ளிட்ட பல்வேறு கண்மாய்கள் நிரம்பி உபரிநீர் தொண்டி கடலில் கலக்கிறது.
இவ்வழியில் கட்டியுள்ள தரைப்பாலங்கள் வழியாக செல்லும் நீரில் துாண்டில் போட்டு பலர் மீன் பிடிக்கின்றனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர்கள் இப்பகுதிக்கு வந்து துாண்டில் போட்டு மீன்பிடிக்கின்றனர்.
இங்கு பிடிக்கப்படும் மீன்களை ஓட்டல்களில் விற்கின்றனர். சிலர் வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர். கெண்டை, கெளுத்தி போன்ற மீன்கள் கிடைக்கிறது. இது குறித்து மீன்பிடிப்பவர்கள் கூறியதாவது:
கண்மாய் மீன்கள் அதிக சுவையாக இருக்கும். பொதுவாக துாண்டில்களில் மீன்களுக்கு இரையாக மண் புழுக்களை பயன்படுத்துவது வழக்கம். நிலங்களில் மண் புழுக்களை பார்ப்பது அரிதாக உள்ளது.
இதனால் கறிக்கடையிலிருந்து கோழி குடல்களை வாங்கி வந்து பயன்படுத்துகிறோம். காரைக்குடி போன்ற நகரங்களுக்கு கொண்டு சென்று கிலோ ரூ.700 முதல் 800 வரை விற்கிறோம் என்றனர்.

