ADDED : செப் 07, 2026 09:32 PM
அ நிறம் | அளவு
தொண்டி: தொண்டி அருகே நம்புதாளை கடற்கரையில் குவிந்துள்ள குப்பையில் தீ விபத்து ஏற்பட்டது. தொண்டி அருகே நம்புதாளை கடற்கரையில் குப்பை குவிந்துள்ளது வழக்கம். நேற்று முன்தினம் அந்த குப்பைக்கு யாரோ சிலர் தீ வைத்ததால் பற்றி எரியத் துவங்கியது. காற்று பலமாக வீசியதால் அருகிலிருந்த மீன்பிடி படகுகள், மற்றும் கரையோரமிருந்த வலைகள் இருக்கும் திசையை நோக்கி முன்னேறியது.
திருவாடானை தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவிக்கபட்டது. நிலைய அலுவலர் முருகானந்தம் மற்றும் வீரர்கள் சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இதனால் பல லட்ச ரூபாய் மதிப்பிலான மீன்பிடி வலைகள் மற்றும் படகுகள் தப்பின.
