/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி பாம்பன் புதிய ரயில் பாலத்தில் மறியல் ஐந்து மாவட்ட மீனவர்கள் தீர்மானம்

ADDED : செப் 21, 2024 12:59 AM
ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி பாம்பன் புதிய ரயில் பாலத்தில் மறியலில் ஈடுபடுவோம் என ஐந்து மாவட்ட மீனவர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.
ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், துாத்துக்குடி மாவட்ட மீனவர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் சித்ரவதை செய்கிறது. மனித உரிமைகளை மீறும் இலங்கையை கண்டிக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டிக்கிறோம். 2024ல் கைதான 108 மீனவர்களில் 78 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களை எந்த நிபந்தனையும் இன்றி விடுவிக்கவும், 2018 முதல் 2024 வரை இலங்கை வசமுள்ள 188 படகுகளை விடுவிக்கவும், இலங்கை நீதிமன்றம் விடுவித்துள்ள 16 படகுகளை மீட்டு வரவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடல் அட்டை பிடிக்க விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து மீண்டும் பிடிக்க மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும். சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப டீசல் விலையை குறைக்க வேண்டும். இலங்கை கடற்படையால் 3 படகுகளை இழந்த மீனவர்களில் கிங்ஸ்டன் என்பவரது குடும்பத்தினர் உடல் நலம் பாதித்து பல ஆயிரம் செலவிட்டுள்ளனர்.
இந்த மருத்துவச் செலவை அரசு ஏற்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் உறுதி அளிக்காவிடில் பாம்பனில் புதிய ரயில் பாலம் திறக்கும் போது மறியல் போராட்டம் நடத்துவோம் என தீர்மானம் நிறைவேற்றினர்.