/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
5 கிலோ கஞ்சாவுடன் ஐந்து பேர் கைது
/
5 கிலோ கஞ்சாவுடன் ஐந்து பேர் கைது
ADDED : பிப் 18, 2025 06:14 AM
முதுகுளத்துார் : ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் 5 கிலோ 250 கிராம் கஞ்சாவுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
முதுகுளத்துார் பகுதியில் கஞ்சா வைத்திருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து முதுகுளத்துார்- ராமநாதபுரம் ரோடு காக்கூர் புறக்காவல் நிலையம் அருகே இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ்ஆனந்த் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே வந்த டூவீலரை சோதனை செய்த போது கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
ஓ.கரிசல்குளம் திவாகரன் 22, பசும்பொன் ராமர்பாண்டி 26, மறவாய்குளம் முனீஸ்வரன் 18, இவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்தனர்.
இதே போன்று முதுகுளத்துார் ஆற்றுப்பாலம் அருகே டூவீலரை சோதனை செய்த போது கீழத்துாவல் நாக முனீஸ்வரன் 24, மேலத்துாவல் கோவிந்தசாமி 22, ஆகியோரிடம் இருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

