/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் கொடிநாள்நிதி ரூ. 98.97 லட்சம் வசூல்
/
ராமநாதபுரத்தில் கொடிநாள்நிதி ரூ. 98.97 லட்சம் வசூல்
ராமநாதபுரத்தில் கொடிநாள்நிதி ரூ. 98.97 லட்சம் வசூல்
ராமநாதபுரத்தில் கொடிநாள்நிதி ரூ. 98.97 லட்சம் வசூல்
ADDED : டிச 09, 2024 05:09 AM
ராமநாதபுரம்: மாவட்டத்தில் கடந்த 2023ல் அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஒத்துழைப்போடு ரூ.98 லட்சத்து 97 ஆயிரத்து 270 கொடி நாள் நிதி வசூலானது.
டிச.,7 படைவீரர் கொடிநாளை முன்னிட்டு, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் சார்பில், கொடிநாள் விழா, தேநீர் விருந்து நடந்தது. 2024ம் ஆண்டிற்கான கொடிநாள் நிதி வசூலை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நிதி வழங்கி துவங்கி வைத்தார்.
மாவட்டத்தில் கடந்த 2023ல் அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஒத்துழைப்போடு ரூ.98 லட்சத்து 97 ஆயிரத்து 270 வசூலாகியுள்ளது.
இந்த நிதிமூலம் முன்னாள் படைவீரர்கள் குழந்தைகள் கல்வி, திருமண, முதியோர் உதவிதொகை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டைவிட கூடுதலாக அனைவரும் நிதி வழங்க வேண்டும் என கலெக்டர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குநர் அர்சுணன், கமாண்டர் (ஓய்வு) நடராஜன், ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., ராஜமனோகரன்,ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் வரதராஜன், முன்னாள் படைவீரர் சங்க தலைவர் செல்வம் நேமிநாதன், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.