நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் நகர் கழகம் சார்பில் மனிதநேய மக்கள் கட்சி 17ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கட்சி கொடியேற்றப்பட்டது. மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பட்டாணி மீரான் முன்னிலை வகித்தார்.
தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா கொடியேற்றினார். நிர்வாகிகள் சாதிக் அலி, ரகுமான் இஷாக், புகாரி, ஆசிக் நிஜாம் பங்கேற்றனர்.

